24 June, 2010

ஏன் பிரிந்தாய் எனை?

பிரிந்திடும் நேரத்தில்
நான் அறிந்திடவில்லையே..
வெறும் வானம்தான் நானென்று,
அதன் நீலமோ நீயென்று,
இன்று உன் நினைவுகள் மேகமாய்,
என்னைத் தழுவிடும்போதெல்லாம்,
மழையாய் அழுகிறேன்,
வெறுமையாய் நான் உணர்கிறேன்,
கவிதையைத் தேடி அலைகிறேன்,
உனக்குள் தொலையத் துடிக்கிறேன்.
ஒரு கணம் தோன்றுமே,
நீ அருகினில் 
இருப்பதாய்,
உயிர் வலி கொல்லுமே,
நீ விலகியே நிற்பதால்,
மறுபடி தோன்றினால்,
என் மலர்விழி கொள்ளுமாய்,
கண்ணீராய் நிரம்பிவா,
பெண் நீராய் உருகினேன்,
கானல் நீராய் கனவுதானோ?
நான் கலையாதிருக்கும் வானம்தானோ?

உலக அழகி

ஆயிரம் பொய்களை சொல்லி 
கல்யாணம் பண்ணலாம், 
அதில் முதல் பொய் இது தான் 
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !

வேண்டாம் மன்னிப்பு

நான் செய்யும் தவறுகளுக்கு என்றும்
மன்னிப்பு வேண்டாம்
தெரியாமல் செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து தூக்கம் போனது !
தெரிந்தே செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து வாழ்க்கை போனது!
நான் செய்த நன்மைகளுக்கும்
செய்யாத தீமைகளுக்கும் சேர்த்து
தண்டனைகளாகவே கொடுத்துவிடுங்கள்
எனக்கு மன்னிப்பு வேண்டாம்
அதன் வலி எனக்கு உறைக்காது.......

நீ என்னை

நீ என்னைக்
காதலிக்கா விட்டாலும்
நான் உன்னை
காதலிப்பேன்
யுத்தத்தில் நடைபெறும்
சமாதானம் போல...

தனிமை

முன்பெல்லாம் எப்போதாவது கிடைக்கும்
தனிமைக்கு வருத்தப்படுவதுண்டு…
இப்போது தனிமை பழகிவிட்டதால்
எப்போதும் இனிமையாகவே இருக்கிறது…
ஆயிரத்தெட்டு நண்பர்கள்,
கட்டுக்கோப்பான வெட்டிக்கதைகள்,
தேவையில்லாத அரசியல்,
எப்பொழுதும் யாரைப்பற்றியாவது
உருப்படியற்ற விமர்சனங்கள்,
ஏமாந்த பேர்வழிகள்
வசமாக மாட்டுகையில்,
எண்ணையில் போட்ட
பண்டமாய் பொரித்தெடுத்தல்,
தன்னுடைய கருத்தே சிறந்ததென
ஒவ்வொருவரும் வாதிடுதல்,
இப்படி எப்படியெல்லாமோ
கூடிக் கழித்திருந்த
பொழுதுகள் இனிமையாகத்தான் இருந்தன,
என்றாவது ஒரு நாள்
என்னைப்பற்றியும் இப்படி பேசுவார்கள்
என்று அறியாதவரையில்!!
இப்போது தனிமையே
இனிமையாக இருக்கிறது…
எனக்கென்ற பொழுதுகள்,
என்னைசுற்றிய கவலைகள்,
என்னைப்ற்றிய விமர்சனம்,
இப்படி எல்லாமே எனக்காகவே
நானே சிந்தித்திருக்க,
தனிமையும் கொஞ்சம் தேவைப்படுகிறது…
ஆகையினால், என்னை உருவாக்கும்
இந்த தனிமை இனிமையானதே…

வெட்கம்

என்
கண்ணீருக்குத்தான்
எத்தனை வெட்கம்?

அவள்
விலகிச் சென்ற பிறகுதான்
எட்டிப் பார்க்கிறது!!!

23 June, 2010

தனிமை பிடித்திருக்கிறது!

தேனூறும் சிறுப்பூவில்
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல

யாருமில்லா தனிமையிலும்
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
ஒரு நினைவும் ஒரு நிழலும்!

முகம் கொடுத்து பேச இயலாது
எல்லோரும் முகம் சுழிக்க
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!

சூழ்நிலை இசையிலும்
நினைவுகளின் அலைவரிசையில்
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!

இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!

மீண்டெழும் சாத்தியக்கூறுகள்
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....

தனிமை பிடித்திருக்கிறது-
எனக்கு நானே செய்துகொண்ட
மானசீக ஒப்பந்தம்!


-->வார்ப்பு!

21 June, 2010

என் குயிலே கூவு

உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு

உன் மௌனம்
சாகும் வரை என்னை சாகடிக்கும்...

நான் உனக்கு நறுக்க நினைத்ததென்னவோ
நகம் தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது..

என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு...

எப்பொழுது கேட்கும் உன் தொலைபேசிச் சங்கீதம்?

மணம்

உனக்கு மணம் என்றாய் மலர்ச்சியுடன்
வாழ்த்துக்கள் என்றேன் வாடியவனாய்...
-->கார்த்தி

உன்னுடன் பேச இயலாததால் கிறுக்குகிறேன்

என் மனம்...
உன்னை மறக்கச் சொன்னேன்
முயன்று தோற்றது...

நீ இல்லா இடம் வெற்றிடமே...

"விண்ணைத் தாண்டி வருவாயா" கவிதையாய் ரசித்தேன்
நமது கதை என்றெண்ணி...

என்னை எப்பொழுதேனும் நினைத்ததுண்டா???

-->கார்த்தி

என் தங்கமே

நினைவில் நிலைக்க
மறுத்துவிடு
கனவில் வருவதை 
நிறுத்திவிடு
விடியலில் விழி 
நனைகிறேன் ....

--> கார்த்தி