நினைவுகளை காலம் கடத்திப்போனாலும்
இன்னமும் உன் பெயர் கொண்ட
எதையேனும் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ,
மறவாமல் ரசிக்கத்தான் செய்கிறேன்
உன் ரசிகனாய்....!
தயவுசெய்து தலைப்பை மறுபடியும் படிக்கவும்....
தேனூறும் சிறுப்பூவில் ஊடல் தேடும் நுண்ணுயிர் போல யாருமில்லா தனிமையிலும் வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது ஒரு நினைவும் ஒரு நிழலும்! முகம் கொடுத்து பேச இயலாது எல்லோரும் முகம் சுழிக்க என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை! சூழ்நிலை இசையிலும் நினைவுகளின் அலைவரிசையில் லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது! இறுகிப்போன இதயத்தின் மத்தியில் செல்லரித்துப்போன நிஜங்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டவை! மீண்டெழும் சாத்தியக்கூறுகள் மறுக்கப்பட்ட உண்மைகளாய்.... தனிமை பிடித்திருக்கிறது- எனக்கு நானே செய்துகொண்ட மானசீக ஒப்பந்தம்! |
