29 March, 2010

ஹைக்கூ
ஆழகழகாய் 
பூக்கள்,

அரளிச் செடியிலும்...

புதுக்கவிதைஎங்கள் இல்லத்தின் 
புதுக்கவிதை...

தங்கையின் புதல்வி ....

தாடி...

உத்தரவின்றி
முளைக்கிறது ..,
பயனில்லா பயிர்கள் ...,
என் முகத்தில்
உன் நினைவால்...!!!

கவிதையாய்.....!

இரு இதயங்களின்

மகரந்தச்சேர்க்கையில்

கருவுற்ற நம் காதலை

கவிதையாய் பிரசவிக்கிறேன்!!!

கவிதை....

இது

காதல் கடிதமல்ல....

வெறும் கவிதையே......!

படித்த பின்

காதல் வயப்பட்டால்

அதற்கு

நான் பொறுப்பல்ல.....!!!

பெண் சிசு...

கதகதப்பாய்.....
சொகுசாய்......
உறங்கிக்கொண்டு இருந்தேன்
கருவறையில்......
மூன்று மாதம் ஆனது ...
ஆஸ்பத்ரி சென்றாள் அம்மா
'பெண் என்றால் கலைத்து விடு "
என்ற வழக்கமான கட்டளையோடு

ஒளிச்சிதறல்களின் துகள்களில்
அதிர்ந்தேன் நான்
வெளிச்சத்தில் என் உருவம்
பார்த்த அவள்
விக்கித்து போய் நின்றாள்
அழக்கூட முடியாமல் ....
பாவம் அவள் .....
.அவளுக்காக .....
உள்ளுக்குள் கரைந்து
உதிரமாய் வெளியேறினேன் நான்
எனக்காக ஏங்கும் நாள் வரும் போது
வருகிறேன் என்று...

வாழ்வின் நீளம்

நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம் படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழி ஒன்றின்
வாழ்க்கை!

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!

நித்தம்... நித்தம்.....

நீ

எத்தனை

முத்தங்கள் தந்தாலும்புதிய நாளில்

நான்

ஏழையாகவே

வந்து நிற்கிறேன் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்

கண்ணீர் துளிகள் கூட

கன்னத்தை முத்தமிட்டு தான்

விடை பெறுகின்றன.......


உனைப்பிரிய மனமில்லாத

எனக்கு மட்டும் என்ன

விதி விலக்கா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான்

வாங்கித் தந்த

பூவை

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

வைத்து விட சொல்கிறாய்......!உன் கூந்தலுக்குள்

மாட்டிக் கொள்கிறது

பூவும்

அதனோடு சேர்ந்து

என் மனசும்!!!

நிலவு!

அமாவாசை எல்லாம்

ஒன்றுமில்லை....

நான் சொன்ன

முத்தக்கவிதை கேட்டு

வெட்கத்தில்

முகம் மூடியிருக்கிறது

நிலவு....!!!

முதல் கவிதை!

ஓடைப்பக்கத்து

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என்

முதல் கவிதை!!!

நட்பும் காதலும்!

பார்க்கும்போதெல்லாம்
புன்னகை அது
நட்பு!


பேசும்போதெல்லாம்
வெட்கம் அது
காதல்!

26 March, 2010

நினைவுகள்

நான்
பயணிக்கும்
பாதை நெடுகிலும்

சாலையோர
மரங்களில்
உன் நினைவுகள்
எனக்காய் பூத்திருக்கும்!

புன்னகை

நான்
பூக்களை தந்தால்
நீ
புன்னகை தருகிறாய்!

நான்
புன்னகை தந்தால்
நீயே
பூத்து விடுகிறாய்!

நினைவுகளுடன்!

கடிதத்தின்
முதல் வரியில்
அன்புக்குரிய!

கடைசி வரியில்
அன்புடன்!

இடைப்பட்ட
வரிகளில்
உன்
நினைவுகளுடன்

-ரசிகன்

25 March, 2010

பயங்கரவாதம்!

என்
மனதை மீறி
வெளிப்படும்
ஒவ்வொரு நினைவும்

எல்லை
தாண்டிய பயங்கரவாதம்!

முதல் ரசிகன்!

நீ
ரசித்து முடித்து
இளைப்பாறுகிற
ஒவ்வொன்றுக்கும்
நான்
முதல் ரசிகன்!

என்
கவிதைகள்
இரண்டாம் பட்சம் தான் !

கவிதை

நீ
ரசிக்கும்
சின்ன சின்ன
விஷயத்தையும்
நினைவில் வைக்கிறேன்!

அதை
மீண்டும் நினைக்கையில்
புதுப்புது
கவிதையாகி விடுகின்றன!

நினைவு

என்
மனித வாழ்வில்
நிரந்தரம் என்று
எதுவுமில்லை!

உன்
நினைவை தவிர!

காதல் திருடி

நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!

என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று!

காதல்

என்
வலதுபுறம்
நடந்துகொண்டு நீ!

உன்
ஒவ்வொரு அடியிலும்

இடதுபுறம்
உடைந்துகொண்டு நான்!

பேரழகி!

அடியே!

உண்மையில்
நீ
அழகி தான்!

அது
ஏனோ!

நான்
பொய் சொல்கையில்
மட்டும்

பேரழகி ஆகி விடுகிறாய்!

காதல் புத்தகம்!

என்
காதல் புத்தகத்தின்
முதல்
பக்கமும் நீ!
கடைசி
பக்கமும் நீ!

இடைப்பட்ட
பக்கங்கள்
தணிக்கை செய்யப்பட்டவை!!!

01 March, 2010

புரிந்துகொள்

புரிந்துகொள்!
தூக்கம் வரவில்லை என்றால்
உன்னை தாலாட்ட சொல்லுவேன்.

நீயே மௌனமாய் இருந்தால்,
நான் எப்படி தூங்குவது.

மனத்தில் வலி வந்தால்,
உன்னிடம் ஆறுதல் கேட்பேன்.

நீயே வலி தந்தால்,
நான் எங்கே போவது?

ஒரு நாள் புரிந்து கொள்வாய் காதலின் வலி.

அன்று புரிந்து கொள்வாய்
இந்த காதலன் மொழி...

ஆசை

கபடமில்லா உன்
சிரிப்பை காண ஆசை!

கோபத்தில் சிவக்கும் உன்
கன்னங்கள் காண ஆசை!

உதட்டோரம் சிந்தும் உன்
புன்னகை காண ஆசை!

பிடித்த சுவையை ருசிக்கும் உன்
முகபாவனை காண ஆசை!

ஒவ்வாத சுவையை உணரும் உன்
முகபாவனை காண ஆசை!

ஊஞ்சலில் ஆடும் உன்
உருவம் காண ஆசை!

ஆடுகையில் உள்ளப்பூரிப்பில் உன்
செயல் காண ஆசை!

கீழே விழ நேரும்போது உன்
பயம் காண ஆசை!

பயத்தில் உன்
சிரிப்பை காண ஆசை!

திட்டும் போது சுளிக்கும் உன்
முகம் காண ஆசை!

வாய்விட்டு அழமுடியாமல்
கண்ணீர் சிந்துவதை காண ஆசை!

அழுது முடித்து களைத்த உன்
முகம் காண ஆசை!

என்னோடு கோபம் கொண்டும்
திருப்பும் உன் முகம் காண ஆசை!

இத்தனை ஆசைகள்
எனக்கிருந்தும்
இவற்றுள் ஏதேனுமொன்று
உனக்கும் உளதா என
தெரிந்து கொள்ள ஆசை!!!
-> Palaniraja

இனிமை..

பாடுவதை நிறுத்தி
கேட்கிறது குயில்..
உனது பேச்ச!!!

காதல்

காதலும் சிகரெட்டும் ஒன்று தான்
இரண்டுமே உதட்டோடு உறவாடிவிட்டு
இதயத்தை புண்ணாக்கி விடும்...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

தங்கமே...

எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே....
வெட்கத்தை கேட்டால் எதைத் தருவாய் !!!