19 February, 2014

validating page not found

validating page not found
http://www.pagenotfound1209.com

16 July, 2011

காதல் நினைவுகளுடன்!

உறங்க நினைக்கிறேன் முடிவதில்லை...
உறக்கம் விழிகளை தொடுவதில்லை....
அழைக்க நினைக்கிறேன் மொழிகளில்லை... 
அணைக்கத் துடிக்கிறேன் நீ அருகிலில்லை.......

28 November, 2010

நீ கொடுக்கும் யாவும்..

நீ எதைச் செய்து கொடுத்தாலும்
அது கலப்படம் ஆகிவிடுகிறது
உன் 
அழகிய காதலும் கலந்து !!!

வீழ்ந்தாலும் வெற்றி எனக்கே

"வீழ்வது வெட்கமல்ல
வீழ்ந்தே கிடப்பதே
வெட்கம்"

வீழ்ந்தேன் நான்
வெட்கப்பட்டாய்
நீ !!!

குழந்தை

மாமன் வாங்கிவந்த இரண்டடுக்கு பேருந்து,
குதிரை வண்டி, கார், பொம்மை வண்டி ஆகியவற்றை
விளையாடி முடித்து சலித்த குழந்தை மறுபடியும்
மாமனை முழங்கால் மண்டியிட சொன்னது
யானை சவாரி செய்ய ... 

காதல்

உன்விழிகள் பேசியதால்
என் மொழிகள்
மவுனமானது..... 

27 November, 2010

இதயம்

இதயம் துடிகின்றதோ இல்லையோ 
     நன்றாக நடிகின்றது 
உன்னை மறந்து விட்டேன் என்று...!!!!

03 October, 2010

காணாமல் போன கனவுகள்

காணாமல் போன என் கனவுகளை
யாரேனும் கண்டெடுத்தால்
அதை கண்ட இடத்திலேயே
போட்டு விடுங்கள்!
அவை திருவிழாவில்
தொலைந்த குழநதைபோல்
பெற்ற என்னிடம் வரத்  துடிக்கும்!
ஆனாலும் நீங்கள் 
அவற்றை என்னிடம் சேர்க்காதீர்கள்!
நான் நிஜமாக்க முடியாத
கனவுகள் எல்லாம்
மனைவியாக்காத காதலி போல!
உங்களிடம் குழந்தை போல் அழும் கனவுகள்
என்னிடம் மறந்த காதலியாய்
கேள்வி கேட்கும்!

அதனால்...
கனவுகள் தொலைந்தே போகட்டும்!
கனவுகளை கண்ட
இடத்திலேயே விட்டு விடுங்கள்!

04 September, 2010

மௌனம்

நான் பேசினேன், நீ பேசினாய்
கேட்டோம்
இப்பொழுது நமது மௌனம்
பேச தொடங்கிவிட்டது

19 August, 2010

ஒற்றுமை

மலரே....
நீயும் நானும் ஒரே ஜாதி
ஏனெனில்
உன்னையும் என்னையும் வாடவைப்பது
பெண்கள்தான்....

14 August, 2010

காதல்

தவறு என்று தெறிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசை தான்
காதல்....

காதல்

என் குழந்தை தனியாக நடக்க பழகிவிட்டது
ஆனால் அவள் இன்னும் என் விரல் பிடித்துதான் நடக்கிறாள்..
என் காதலியாக....

30 July, 2010

ரசிகன்

நினைவுகளை காலம் கடத்திப்போனாலும்
 இன்னமும் உன் பெயர் கொண்ட 
எதையேனும் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, 
மறவாமல் ரசிக்கத்தான் செய்கிறேன் 
உன் ரசிகனாய்....!

25 July, 2010

அழகே

உன் அழகே
அழகான உன்
சிந்தனைதான்
தெரியுமா?

அலுக்காத கேள்வி

எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத
கேள்வி ...
என்னை அவ்வளவு
பிடிச்சுருக்காடா..??

எப்படி காதலித்துத் தொலைத்தேன் ??

உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...

நினைவுகள்

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

நீதான்

ஏண்டா இப்படிக் காதலிச்சு என்
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...

ஓ...........

உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?


ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?

நடக்கும்

இது நடக்குமா?
கேற்க்கிறாய்.
நான்
உன்னைக் காதலிப்பது
மட்டும் நடக்கும்
என்றா நினைத்திருந்தேன்?

என் கன்னுக்குட்டி

உன் கவிதை நன்றாகத்தான்
 இருக்குடா என்கிறாய்,
  அதை உன் கண்களில் 
     இருந்துதான் கற்றுக்கொண்டேன்
       என்றால் நம்புவாயா?
         என் கன்னுக்குட்டி

கவிதை

எனக்கு கவிதை சொல்லத்
    தெரியாது என்கிறாய்...
என்னை திட்டுவதாய் நினைத்துக்கொண்டு 
    நீ சொல்பவற்றை எந்த வகையில் 

       சேர்ப்பது நான்?

தேவை

உயிர் வாழ ஆக்ஸிஜன் 
   தேவை என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்” வாழ 
  நிச்சயமாய்
     நீ தேவை.....

தப்பு

எல்லாத்தையும் தப்புத்தப்பா செஞ்சு 
   வைக்கறதே உனக்கு வேலையா போச்சு....
உன்மீதான என்காதலின் வெளிப்பாடுகளை 
   ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,


நான் செய்த சிறு சிறு தவறுகளை 
   லாங் டேர்ம் மெம்மரிலும் 
      போட்டு வைத்திருக்கிறாயே?

அழகு

கண்ணே!!!
    கவிதைக்கு மட்டுமல்ல 
காதலுக்கும்
    பொய் அழகுதான்...

ஏய்
    நீ ரொம்ப
       அழகாயிருக்கே...........
24 June, 2010

ஏன் பிரிந்தாய் எனை?

பிரிந்திடும் நேரத்தில்
நான் அறிந்திடவில்லையே..
வெறும் வானம்தான் நானென்று,
அதன் நீலமோ நீயென்று,
இன்று உன் நினைவுகள் மேகமாய்,
என்னைத் தழுவிடும்போதெல்லாம்,
மழையாய் அழுகிறேன்,
வெறுமையாய் நான் உணர்கிறேன்,
கவிதையைத் தேடி அலைகிறேன்,
உனக்குள் தொலையத் துடிக்கிறேன்.
ஒரு கணம் தோன்றுமே,
நீ அருகினில் 
இருப்பதாய்,
உயிர் வலி கொல்லுமே,
நீ விலகியே நிற்பதால்,
மறுபடி தோன்றினால்,
என் மலர்விழி கொள்ளுமாய்,
கண்ணீராய் நிரம்பிவா,
பெண் நீராய் உருகினேன்,
கானல் நீராய் கனவுதானோ?
நான் கலையாதிருக்கும் வானம்தானோ?

உலக அழகி

ஆயிரம் பொய்களை சொல்லி 
கல்யாணம் பண்ணலாம், 
அதில் முதல் பொய் இது தான் 
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !

வேண்டாம் மன்னிப்பு

நான் செய்யும் தவறுகளுக்கு என்றும்
மன்னிப்பு வேண்டாம்
தெரியாமல் செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து தூக்கம் போனது !
தெரிந்தே செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து வாழ்க்கை போனது!
நான் செய்த நன்மைகளுக்கும்
செய்யாத தீமைகளுக்கும் சேர்த்து
தண்டனைகளாகவே கொடுத்துவிடுங்கள்
எனக்கு மன்னிப்பு வேண்டாம்
அதன் வலி எனக்கு உறைக்காது.......

நீ என்னை

நீ என்னைக்
காதலிக்கா விட்டாலும்
நான் உன்னை
காதலிப்பேன்
யுத்தத்தில் நடைபெறும்
சமாதானம் போல...

தனிமை

முன்பெல்லாம் எப்போதாவது கிடைக்கும்
தனிமைக்கு வருத்தப்படுவதுண்டு…
இப்போது தனிமை பழகிவிட்டதால்
எப்போதும் இனிமையாகவே இருக்கிறது…
ஆயிரத்தெட்டு நண்பர்கள்,
கட்டுக்கோப்பான வெட்டிக்கதைகள்,
தேவையில்லாத அரசியல்,
எப்பொழுதும் யாரைப்பற்றியாவது
உருப்படியற்ற விமர்சனங்கள்,
ஏமாந்த பேர்வழிகள்
வசமாக மாட்டுகையில்,
எண்ணையில் போட்ட
பண்டமாய் பொரித்தெடுத்தல்,
தன்னுடைய கருத்தே சிறந்ததென
ஒவ்வொருவரும் வாதிடுதல்,
இப்படி எப்படியெல்லாமோ
கூடிக் கழித்திருந்த
பொழுதுகள் இனிமையாகத்தான் இருந்தன,
என்றாவது ஒரு நாள்
என்னைப்பற்றியும் இப்படி பேசுவார்கள்
என்று அறியாதவரையில்!!
இப்போது தனிமையே
இனிமையாக இருக்கிறது…
எனக்கென்ற பொழுதுகள்,
என்னைசுற்றிய கவலைகள்,
என்னைப்ற்றிய விமர்சனம்,
இப்படி எல்லாமே எனக்காகவே
நானே சிந்தித்திருக்க,
தனிமையும் கொஞ்சம் தேவைப்படுகிறது…
ஆகையினால், என்னை உருவாக்கும்
இந்த தனிமை இனிமையானதே…

வெட்கம்

என்
கண்ணீருக்குத்தான்
எத்தனை வெட்கம்?

அவள்
விலகிச் சென்ற பிறகுதான்
எட்டிப் பார்க்கிறது!!!

23 June, 2010

தனிமை பிடித்திருக்கிறது!

தேனூறும் சிறுப்பூவில்
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல

யாருமில்லா தனிமையிலும்
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
ஒரு நினைவும் ஒரு நிழலும்!

முகம் கொடுத்து பேச இயலாது
எல்லோரும் முகம் சுழிக்க
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!

சூழ்நிலை இசையிலும்
நினைவுகளின் அலைவரிசையில்
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!

இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!

மீண்டெழும் சாத்தியக்கூறுகள்
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....

தனிமை பிடித்திருக்கிறது-
எனக்கு நானே செய்துகொண்ட
மானசீக ஒப்பந்தம்!


-->வார்ப்பு!

21 June, 2010

என் குயிலே கூவு

உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு

உன் மௌனம்
சாகும் வரை என்னை சாகடிக்கும்...

நான் உனக்கு நறுக்க நினைத்ததென்னவோ
நகம் தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது..

என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு...

எப்பொழுது கேட்கும் உன் தொலைபேசிச் சங்கீதம்?

மணம்

உனக்கு மணம் என்றாய் மலர்ச்சியுடன்
வாழ்த்துக்கள் என்றேன் வாடியவனாய்...
-->கார்த்தி

உன்னுடன் பேச இயலாததால் கிறுக்குகிறேன்

என் மனம்...
உன்னை மறக்கச் சொன்னேன்
முயன்று தோற்றது...

நீ இல்லா இடம் வெற்றிடமே...

"விண்ணைத் தாண்டி வருவாயா" கவிதையாய் ரசித்தேன்
நமது கதை என்றெண்ணி...

என்னை எப்பொழுதேனும் நினைத்ததுண்டா???

-->கார்த்தி

என் தங்கமே

நினைவில் நிலைக்க
மறுத்துவிடு
கனவில் வருவதை 
நிறுத்திவிடு
விடியலில் விழி 
நனைகிறேன் ....

--> கார்த்தி 


04 May, 2010

ஹைக்கூ

பண்பாட்டைச் சீரழிக்கும்
வீட்டுக்குள் பகை
தொலைக்காட்சி....


29 March, 2010

ஹைக்கூ
ஆழகழகாய் 
பூக்கள்,

அரளிச் செடியிலும்...

புதுக்கவிதைஎங்கள் இல்லத்தின் 
புதுக்கவிதை...

தங்கையின் புதல்வி ....

தாடி...

உத்தரவின்றி
முளைக்கிறது ..,
பயனில்லா பயிர்கள் ...,
என் முகத்தில்
உன் நினைவால்...!!!

கவிதையாய்.....!

இரு இதயங்களின்

மகரந்தச்சேர்க்கையில்

கருவுற்ற நம் காதலை

கவிதையாய் பிரசவிக்கிறேன்!!!

கவிதை....

இது

காதல் கடிதமல்ல....

வெறும் கவிதையே......!

படித்த பின்

காதல் வயப்பட்டால்

அதற்கு

நான் பொறுப்பல்ல.....!!!

பெண் சிசு...

கதகதப்பாய்.....
சொகுசாய்......
உறங்கிக்கொண்டு இருந்தேன்
கருவறையில்......
மூன்று மாதம் ஆனது ...
ஆஸ்பத்ரி சென்றாள் அம்மா
'பெண் என்றால் கலைத்து விடு "
என்ற வழக்கமான கட்டளையோடு

ஒளிச்சிதறல்களின் துகள்களில்
அதிர்ந்தேன் நான்
வெளிச்சத்தில் என் உருவம்
பார்த்த அவள்
விக்கித்து போய் நின்றாள்
அழக்கூட முடியாமல் ....
பாவம் அவள் .....
.அவளுக்காக .....
உள்ளுக்குள் கரைந்து
உதிரமாய் வெளியேறினேன் நான்
எனக்காக ஏங்கும் நாள் வரும் போது
வருகிறேன் என்று...

வாழ்வின் நீளம்

நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம் படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழி ஒன்றின்
வாழ்க்கை!

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!

நித்தம்... நித்தம்.....

நீ

எத்தனை

முத்தங்கள் தந்தாலும்புதிய நாளில்

நான்

ஏழையாகவே

வந்து நிற்கிறேன் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்

கண்ணீர் துளிகள் கூட

கன்னத்தை முத்தமிட்டு தான்

விடை பெறுகின்றன.......


உனைப்பிரிய மனமில்லாத

எனக்கு மட்டும் என்ன

விதி விலக்கா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான்

வாங்கித் தந்த

பூவை

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

வைத்து விட சொல்கிறாய்......!உன் கூந்தலுக்குள்

மாட்டிக் கொள்கிறது

பூவும்

அதனோடு சேர்ந்து

என் மனசும்!!!

நிலவு!

அமாவாசை எல்லாம்

ஒன்றுமில்லை....

நான் சொன்ன

முத்தக்கவிதை கேட்டு

வெட்கத்தில்

முகம் மூடியிருக்கிறது

நிலவு....!!!

முதல் கவிதை!

ஓடைப்பக்கத்து

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என்

முதல் கவிதை!!!

நட்பும் காதலும்!

பார்க்கும்போதெல்லாம்
புன்னகை அது
நட்பு!


பேசும்போதெல்லாம்
வெட்கம் அது
காதல்!

26 March, 2010

நினைவுகள்

நான்
பயணிக்கும்
பாதை நெடுகிலும்

சாலையோர
மரங்களில்
உன் நினைவுகள்
எனக்காய் பூத்திருக்கும்!

புன்னகை

நான்
பூக்களை தந்தால்
நீ
புன்னகை தருகிறாய்!

நான்
புன்னகை தந்தால்
நீயே
பூத்து விடுகிறாய்!

நினைவுகளுடன்!

கடிதத்தின்
முதல் வரியில்
அன்புக்குரிய!

கடைசி வரியில்
அன்புடன்!

இடைப்பட்ட
வரிகளில்
உன்
நினைவுகளுடன்

-ரசிகன்

25 March, 2010

பயங்கரவாதம்!

என்
மனதை மீறி
வெளிப்படும்
ஒவ்வொரு நினைவும்

எல்லை
தாண்டிய பயங்கரவாதம்!

முதல் ரசிகன்!

நீ
ரசித்து முடித்து
இளைப்பாறுகிற
ஒவ்வொன்றுக்கும்
நான்
முதல் ரசிகன்!

என்
கவிதைகள்
இரண்டாம் பட்சம் தான் !

கவிதை

நீ
ரசிக்கும்
சின்ன சின்ன
விஷயத்தையும்
நினைவில் வைக்கிறேன்!

அதை
மீண்டும் நினைக்கையில்
புதுப்புது
கவிதையாகி விடுகின்றன!

நினைவு

என்
மனித வாழ்வில்
நிரந்தரம் என்று
எதுவுமில்லை!

உன்
நினைவை தவிர!

காதல் திருடி

நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!

என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று!

காதல்

என்
வலதுபுறம்
நடந்துகொண்டு நீ!

உன்
ஒவ்வொரு அடியிலும்

இடதுபுறம்
உடைந்துகொண்டு நான்!

பேரழகி!

அடியே!

உண்மையில்
நீ
அழகி தான்!

அது
ஏனோ!

நான்
பொய் சொல்கையில்
மட்டும்

பேரழகி ஆகி விடுகிறாய்!

காதல் புத்தகம்!

என்
காதல் புத்தகத்தின்
முதல்
பக்கமும் நீ!
கடைசி
பக்கமும் நீ!

இடைப்பட்ட
பக்கங்கள்
தணிக்கை செய்யப்பட்டவை!!!

01 March, 2010

புரிந்துகொள்

புரிந்துகொள்!
தூக்கம் வரவில்லை என்றால்
உன்னை தாலாட்ட சொல்லுவேன்.

நீயே மௌனமாய் இருந்தால்,
நான் எப்படி தூங்குவது.

மனத்தில் வலி வந்தால்,
உன்னிடம் ஆறுதல் கேட்பேன்.

நீயே வலி தந்தால்,
நான் எங்கே போவது?

ஒரு நாள் புரிந்து கொள்வாய் காதலின் வலி.

அன்று புரிந்து கொள்வாய்
இந்த காதலன் மொழி...

ஆசை

கபடமில்லா உன்
சிரிப்பை காண ஆசை!

கோபத்தில் சிவக்கும் உன்
கன்னங்கள் காண ஆசை!

உதட்டோரம் சிந்தும் உன்
புன்னகை காண ஆசை!

பிடித்த சுவையை ருசிக்கும் உன்
முகபாவனை காண ஆசை!

ஒவ்வாத சுவையை உணரும் உன்
முகபாவனை காண ஆசை!

ஊஞ்சலில் ஆடும் உன்
உருவம் காண ஆசை!

ஆடுகையில் உள்ளப்பூரிப்பில் உன்
செயல் காண ஆசை!

கீழே விழ நேரும்போது உன்
பயம் காண ஆசை!

பயத்தில் உன்
சிரிப்பை காண ஆசை!

திட்டும் போது சுளிக்கும் உன்
முகம் காண ஆசை!

வாய்விட்டு அழமுடியாமல்
கண்ணீர் சிந்துவதை காண ஆசை!

அழுது முடித்து களைத்த உன்
முகம் காண ஆசை!

என்னோடு கோபம் கொண்டும்
திருப்பும் உன் முகம் காண ஆசை!

இத்தனை ஆசைகள்
எனக்கிருந்தும்
இவற்றுள் ஏதேனுமொன்று
உனக்கும் உளதா என
தெரிந்து கொள்ள ஆசை!!!
-> Palaniraja

இனிமை..

பாடுவதை நிறுத்தி
கேட்கிறது குயில்..
உனது பேச்ச!!!

காதல்

காதலும் சிகரெட்டும் ஒன்று தான்
இரண்டுமே உதட்டோடு உறவாடிவிட்டு
இதயத்தை புண்ணாக்கி விடும்...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

தங்கமே...

எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே....
வெட்கத்தை கேட்டால் எதைத் தருவாய் !!!

24 February, 2010

என் கண்ணில் நீர் வடிந்தால்...

நான் அழுதால் தான்
நீ சிரிப்பாய் எனில்
காத்திருக்கிறேன் - நாள் முழுவதும்
அழுது கொண்டே இருக்க...

எப்பொழுது புரிந்து கொள்வாயடி?

அப்பொழுது கேட்டது போல,
இப்பொழுதும் கேட்கிறேன்…
எப்பொழுது என்னை புரிந்து கொள்வாயடி?

தாய்மொழி கூட தகராறு செய்யுதடி!

தங்கமே!
உன் நினைவுகள்
மனதினில் புகுந்ததும்
தாய்மொழி கூட
தகராறு செய்யுதடி...

கனவுக்குழந்தை...!

என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...

உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...

என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...

கூட்டிவருவாயா என் காதலியை...!

->காயத்ரி

21 February, 2010

தலைப்பை தாங்களே தாருங்களேன்

மேல் இமைகளில்
நீ
இருக்கிறாய்
கீழ் இமைகளில்
நான்
இருக்கிறேன்
இந்த கண்கள்
தூங்கிவிட்டால்
என்ன!

-> அறிவுமதி

ஹைக்கூ

கவிதையில்
கஞ்சத்தனம் ..!!!

19 February, 2010

செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

-> அறிவும‌தி

18 February, 2010

ஒரு வீரனின் மனைவி மனம்

'உன் பிள்ளையை ஈன்ற சுகம்,
உன்னை போர்முடிந்து ,
நலமாக பார்த்ததும்'.....

அழகு

உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…

காதலித்துப் பார்

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

-> வைரமுத்து

காதலி...

பதில் சொல்ல நான் நினைக்க
பக்கத்தில் நீ இல்லை
பக்குவமாய் நான் இருக்க
பறந்து போனதென்ன
என் பைங்கிளியே
உன் நினைவில் நானுருகி
என் இரவு நீளுதடி
பறந்து வா பைங்கியே
பாவலனை தேடி.........

நட்பு

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
-> குறள்

Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends.

மெய்க்காதல்...

ஓர் நொடி பார்வையில்

ஓர் ஜென்மம் கடந்து விட்டேன் .......

நீயும் நானும்

தாத்தா பாட்டியாக !!!!!

நிறம்...

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான்
கருப்பு மனிதனுக்கு குருதி சிவப்புதான்
நிறங்களில் இல்லை வாழ்கை
மனித மனங்களில் உள்ளதே வாழ்க்கை...

மரம்....

துப்பிய விஷம் அருந்துகிறாயே
நீ சிவபெருமானோ
ஓ.... மரம்!

இன்றைய அரசியல்...

நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
நாலந்தா பல்கழைக்கழக
அரசியல்...

விதி

ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்...

சுகம்

வளை காப்பு!
படைப்பைப் படித்த
நண்பனின் பாராட்டு!

படைப்பை
அனுப்பிவிட்டுக்
காத்திருந்தான்!
பேறுக்கால சுகம்!

என்ன கொடுமை சார்....

அதிக விலை கொடுத்தாலும்
உரிமை விற்றவர்க்கே சொந்தம்!
கல்யாண மாப்பிள்ளை!

அவலம்..

தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்...
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்...

ஹைக்கூ

ஆரம்பப் பாடம்
உடற்பயிற்சி மையம்.
உயர்ந்த கட்டணத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
எவ்வளவு ஓடினாலும்
புறப்பட்ட இடத்திலேயே
இருப்பதற்கு..

ஹைக்கூ

காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி...

விகடம் சொல்லிச்சிரி ...

"அம்மா... அப்பா..."

"புள்ள வந்தானா?"

"ஆமா..."

"புது வண்டியப் பாத்தானா?"

"ஆமா, ஆமா..."

"என்ன சொன்னான்?..."

எதுவும் சொல்லாமல்
ஏறிட்டுச் சிரித்தாள்...

"சொல்லித் தொலையுங்கலேன்"

"இன்னும் நல்லதாக்
கிடைக்கலையான்னு சொன்னான்"

உரக்கச் சிரித்துவிட்டு
ஓய்ந்தவர் சொன்னார்,
"உன்னை
முதலில் பாத்தப்ப
என்ன சொன்னேனோ
அதையேதான் அவனும்
அப்படியே சொல்லியிருக்கான்..."

அங்கே,
கோபத்தைக் காண்பிக்க
முயற்சித்துத் தோற்றவளாய்,
குலுங்கிச் சிரித்தாள் அம்மா...

ஹைக்கூ

எரிந்தது வீடு

அடுப்பு எரியாததால்...

-> கார்த்திகேயன்.கா.ச

சோகத்தை ராகமாக்கு

ஒரு பறவை உன் தலையில் எச்சமிடுவதை
உன்னல் தடுக்க முடியாது;

ஆனால் அது உன் தலையில் கூடுகட்டாமல்
தடுக்க முடியும்..

சோகத்தை ராகமாக்கு
உலகம் வசப்படும் ..

அண்ணன்
வைரமுத்து...

17 February, 2010

அம்மா

அன்பு என்ற தலைப்பில்

மிக சிறிய கவிதை கேட்டார்கள்......

அம்மா

என்றேன் உடனே......

கேட்டது அம்மாவாக இருந்தால்

இன்னும் சின்னதாய் சொல்வேன்

நீ என்று........


ஹைகூ

ஆங்கிலப்பள்ளியில்
அடி வாங்கிய குழந்தை
அழுதது
"அம்மா" என்று....

28 January, 2010

தேடிச் சோறுநிதந் தின்று - பாரதி

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -

மனம் வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -

நரை கூடிக் கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -

பல வேடிக்கை மனிதரைப்போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?